வேறு யாரும் செய்யாத வித்தியாசமான சாதனையை படைத்த சூர்யகுமார் யாதவ்!
நாக்பூர் டெஸ்ட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் வித்தியாசமான சாதனையை படைத்தார்.
முதல் டெஸ்ட்
அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 177 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனதைத் தொடர்ந்து, இந்திய அணி தற்போது துடுப்பாடி வருகிறது.
சூர்யகுமார் சாதனை
இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் அறிமுகமாகியுள்ளார். இதன்மூலம் அவர் தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். அதாவது 30 வயதுக்கு பின் மூன்று வித கிரிக்கெட்டிலும் அறிமுகமான ஒரே வீரர் சூர்யகுமார் தான்.
30 வயதில் கடந்த 2021ஆம் ஆண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் அறிமுகமான அவர், தற்போது 32வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளார். இந்திய வீரர்களில் இந்த அரிய சாதனையை படைத்த முதல் வீரர் சூர்யகுமார் யாதவ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
@AP