பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடுப்பான சூர்யகுமார் யாதவ் - எதற்கு தெரியுமா?
தன்னை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம் என இந்திய அணியின் இளம் வீரர் சூர்யகுமார் யாதவ் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் அறிமுகமான ம் சூர்யகுமார் யாதவ் இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 197 ரன்களையும், 11 டி20 போட்டிகளில் விளையாடி 244 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு அரை சதமும், டி20 கிரிக்கெட்டில் மூன்று அரை சதமும் அடித்து அசத்தியுள்ளார்.
இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங். ஃபில்டிங் என அனைத்திலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முதலாவது ஒருநாள் போட்டிக்கு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யகுமார் யாதவ் கலந்து கொண்ட நிலையில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு இந்திய அணியில் தற்போது 5வது அல்லது 6வது வீரராக களமிறங்க வாய்ப்பு தரப்படுகிறது. எனக்கு எந்த வரிசை இடம் கிடைத்தாலும் சிறப்பாக விளையாடுவேன் என கூறியுள்ளார். மேலும் போட்டியின் போது எனக்கு வாய்ப்பு தரப்பட்டால், பந்துவீச்சு திறமையை காட்டுவேன். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே என் கனவு, ஆசை. சிவப்பு பந்து கிரிக்கெட் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் சூர்ய குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
அப்போது நிருபர் ஒருவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் பெவன் போல் சூர்யகுமார் யாதவ் விளையாடுகிறார் என்று தெரிவிக்க அதற்கு என்னை யாரிடமும் ஒப்பிட்டு பேச வேண்டாம். நான் இந்தியாவுக்காக 6 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறேன் என்று பதில் அளித்தார்.