யார்க்கர் பந்தை 99 மீற்றர் சிக்ஸர் பறக்க விட்ட சூர்யகுமார் யாதவ்! கூரைக்கு மேல் விழுந்த வீடியோ காட்சி
கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், சூர்யகுமார் யாதவ் 99 மீற்றர் சிக்ஸர் பறக்கவிட்ட வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
நேற்று நடந்த ஐபிஎல் தொடரில், இயான் மோர்கனின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோகித்சர்மாவின் மும்பை அணியும் மோதின.
இப்போட்டியில் மும்பை அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றி பெற வேண்டிய போட்டியை, கொல்கத்தா அணி, அப்படியே மும்பையிடம் கொடுத்துவிட்டதால், அந்தணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
SKY! 👏🔥 || Deposited it for 99m huge SIX 🤙#MI #KKRHaiTaiyaar #MIvsKKR #SuryakumarYadav pic.twitter.com/qZ75OU8Fjx
— Tausif #MI |HBD Karthik & Geet | (@iamtausif5) April 13, 2021
இந்நிலையில், இப்போட்டியில் மும்பை அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் 99 மீற்றர் சிக்ஸர் அடித்தார்.
பேட் கம்மின்ஸ் வீசிய 10-வது ஓவரின் 5-வது பந்தில் அடித்த சிக்ஸர் எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.
பேட் கம்மின்ஸ் வீசிய அந்த பந்தானது யார்க்கர் லெந்தில் அமைய அதனையும் தனது புட் ஒர்க்கால் ப்ளிக்காடி சிக்ஸராக மாற்றினார் சூர்யகுமார் யாதவ்.
இதைக் கண்ட மும்பை அணி வீரர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினர்.