பிரித்தானியாவை உலுக்கி வரும் எம்.பி. மரணம்! கொலையாளியின் பெயர், விபரம் வெளியானது

Police Murder UnitedKingdom Sir David Amess Ali Harbi Ali
By Kaviarasan Oct 16, 2021 09:10 PM GMT
Report

பிரித்தானியா எம்.பி. சர் டேவிட் அமெஸ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் பாராளுமன்ற உறுப்பினரான Sir David Amess வெள்ளிக்கிழமை Leigh-on-Sea-யில் உள்ள Belfairs Methodist தேவாலயத்தில் நடந்த தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார்.

எம்.பியின் இந்த மரணம் பிரித்தானியாவையே உலுக்கியுள்ளது. குறிப்பாக பிரதமர் போரிஸ்ஜோன்சன் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியிலும், மிகுந்த மனவேதனையிலும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

பிரித்தானியாவை உலுக்கி வரும் எம்.பி. மரணம்! கொலையாளியின் பெயர், விபரம் வெளியானது | Suspect Arrested Over Sir David Amess Murder

மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பொலிசார் உடனடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் சோமாலியா வம்சாவளியை சேர்ந்தவர் என்பதும் இஸ்லாமிய தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், தற்போது அந்த நபரின் பெயர் Ali Harbi Ali பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 25 வயது மதிக்கத்தக்க இந்த நபரே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஆனால், பொலிசார் இது குறித்து எந்த ஒரு தகவலை வெளியிடவில்லை. அதே சமயம் அவரின் பெயர் Ali Harbi Ali எனவும், இவர் பிரித்தானியாவில் இஸ்லாமியராக வாழ்ந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

பயங்கரவாதச் சட்டம் 2000 பிரிவு 41 இன் கீழ் கைது செய்யப்பட்ட இவர், லண்டன் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து நேற்று Westminster Magistrates நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, பொலிசார் அவகாசம் கேட்டுக் கொண்டதன் காரணமாக, மேலும் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வரும் அக்டோபர் 22-ஆம் திகதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் லண்டன் பகுதியில் குற்றவாளிக்கு தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும் மூன்று முகவரிகளுக்குச் சென்று தேடுதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, கடந்த 2016-ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸின், கொலை செய்யப்பட்டார். கொலை நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ஒரு எம்.பி. கொலை செய்யப்பட்டிருப்பது, மற்ற எம்.பிக்களிடையே ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொலைக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த தாக்குதல், எம்.பி.க்களின் பாதுகாப்பிற்காக சர்ச்சையைக் கிளப்பியது

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US