பள்ளிக்குச் சென்ற மாணவி சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்: சமீபத்திய தகவல்
Suspect in death of 13-year-old girl dies in hospital: ஜேர்மனியில் பள்ளிக்குச் சென்ற மாணவி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நபர் உயிரிழந்துவிட்டார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7.15 மணிக்கு, பெர்லினிலிருந்து பள்ளிக்குச் சென்ற 13 வயது மாணவி ஒருத்தி வீடு திரும்பவேயில்லை
பின்னர், அவள் பாழடைந்த வீடொன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள்!
மாணவி சடலமாக மீட்கப்பட்ட விவகாரம்
ஜேர்மனி - போலந்து எல்லையில் அமைந்துள்ள Altglietzen என்னும் கிராமத்தில் அமைந்துள்ள பாழடைந்த வீடொன்றில் அந்த மாணவி உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு 22 வயது இளைஞர் ஒருவரும் இருப்பது தெரியவந்துள்ளது.

பொலிசாரைக் கண்டதும் அந்த இளைஞர் தன்னைத்தான் சுட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவர் உயிரிழக்கவில்லை.
படுகாயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த இளைஞர் உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அந்த நபர் ஏற்கனவே சிறார் தொடர்பான குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் என பெர்லினிலுள்ள விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.