பிரான்சில் புலம்பெயர்ந்தோரால் கொல்லப்பட்ட இளம்பெண் இவர்தான்: புகைப்படம் வெளியானது
பிரான்சில் கடந்த மாதம் இளம்பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரைக் கொலை செய்ததாக புலம்பெயர்ந்தோர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அந்த இளம்பெண், மற்றும் அவரைக் கொலை செய்த நபர் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்
செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி, பிரான்ஸ் தலைநகரான பாரீஸில், Paris-Dauphine பல்கலைக்கழக மாணவியான Philippine (19) என்னும் இளம்பெண், வனப்பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவரைக் கொலை செய்ததாக மொராக்கோ நாட்டவரான 22 வயது நபர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டார்.
தற்போது, கொலை செய்யப்பட்ட Philippineஉடைய புகைப்படம் வெளியாகியுள்ளது. அத்துடன், அவரைக் கொலை செய்த புலம்பெயர்ந்தோரின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது.
மொராக்கோ நாட்டவரான அந்த நபரின் பெயர் Taha O. என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Philippineஐ சீரழித்துக் கொன்றுவிட்டு அவர் சுவிட்சர்லாந்துக்கு தப்பிய நிலையில், ஜெனீவா மாகாணத்தில் சுவிஸ் பொலிசார் அவரை செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி கைது செய்தார்கள்.
இன்று, Taha O,.பிரான்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |