ஜேர்மனியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஹமாஸ் அமைப்பினர் கைது
ஜேர்மனியில், இஸ்ரேல் மற்றும் யூத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட, ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மூன்று பேர் கைது கைது
செய்யப்பட்ட மூன்று பேரில் இரண்டு பேர் ஜேர்மானியர்கள், ஒருவர் லெபனானில் பிறந்தவர்.
அவர்கள் தாக்குதல் நடத்துவதற்காக, கோடையிலேயே ஆயுதங்களையும் குண்டுகளையும் வாங்கி சேமித்துவைத்துள்ளதாக ஜேர்மன் ஃபெடரல் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Abed Al G, Wael F M மற்றும் Ahmad I என்னும் அந்த மூன்று பேரும் செவ்வாயன்று பெர்லினில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்களிடமிருந்து பல்வேறு வகையான துப்பாக்கிகளும் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பு தங்கள் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும், பாலஸ்தீன மக்கள் மீதான ஜேர்மன் மக்களின் இரக்கத்தை இல்லாமல் செய்வதற்காக இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் இன்று ஃபெடரல் நீதிபதி ஒருவர் முன் ஆஜர் செய்யப்பட உள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |