சவுதி ஊடகவியலாளர் ஜமால் கொலை தொடர்பில் பிரான்சில் ஒருவர் கைது... சவுதியிலிருந்து எழுந்துள்ள எதிர்ப்பு

France Journalist Jamal Khashoggi
By Balamanuvelan Dec 08, 2021 10:30 AM GMT
Report

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பிரான்ஸ் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

சவுதி அரேபிய அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் அந்த நாட்டின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் 2018ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த படுகொலையின் பின்னணியில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக துருக்கி குற்றம் சாட்டியது.‌ ஆனால் சவுதி அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது.

இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் Khalid Alotaibi (33) என்னும் ஒருவரை கைது செய்துள்ளதாக பிரான்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர் சவுதி அரண்மனையில் காவலாளியாக வேலை பார்த்தவர் என்று கூறப்படுகிறது, தேடப்படும் 26 குற்றவாளிகளில் அவரும் ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது. Khalid துருக்கி பிறப்பித்த ஒரு கைது வாரண்டின் அடிப்படையில் பிரெஞ்சு எல்லை பாதுகாப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்சின் Charles de Gaulle விமான நிலையத்திலிருந்து ரியாத் செல்வதற்காக விமானம் ஏற முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

ஆனால், இந்த சம்பவத்தால் சவுதி பதற்றமடைந்துள்ளதாக தெரிகிறது. கைது செய்யப்பட்ட Khalidக்கும் ஜமால் வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள பாரீஸிலுள்ள சவுதி தூதரகம், உடனடியாக அவரை விடுதலை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அவர் உண்மையாகவே ஜமால் கொலையுடன் தொடர்புடையவர்தானா என்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை பிரான்ஸ் துவங்கியுள்ளது. அது உறுதி செய்யப்படும் நிலையில், Khalid பிரான்ஸ் அரசு வழக்கறிஞர்கள் முன் ஆஜர் செய்யப்படுவார்.

இதற்கிடையில், இந்த கைது நடவடிக்கையை ஜமாலின் காதலி Hatice Cengiz வரவேற்றுள்ளார்.  

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US