சுவிஸ் துப்பாக்கிச்சூடு சம்பவம்: புதிய தகவல்கள்
Suspected Swiss gunman turned himself into police: சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய நபர் தானாக முன்வந்து சரணடைந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை சுவிட்சர்லாந்தின் Aarau மாகாணத்தில் நடந்துகொண்டிருந்த ஒரு இசை நிகழ்ச்சியின்போது, திடீரென ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

அந்த சம்பவத்தில் இத்தாலி நாட்டவரான மரியா (Maria Spinelli, 22) என்னும் இளம்பெண் கொல்லப்பட்டார். ஆறு பேர் காயமடைந்தார்கள். அவர்களில் இருவர் இன்னமும் மருத்துவமனையில்தான் உள்ளார்கள்.

புதிய தகவல்கள்
இந்நிலையில், தாக்குதல்தாரி தொடர்பில் சில புதிய தகவல்களை தற்போது பொலிசார் வெளியிட்டுள்ளார்கள்.
தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டதாக மட்டுமே முதலில் தகவல் வெளியான நிலையில், தற்போது, அவர் தானாக முன்வந்து சரணடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், சம்பவம் Aarau மாகாணத்தில் நிகழ்ந்த நிலையில், தாக்குதல்தாரி, திங்கட்கிழமையன்று Jura மாகாண பொலிசாரிடம் சரணடைந்ததாகவும், அவரது வாகனம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தான் சிறிது காலமாகவே நலமாக இல்லை என்று அந்த 43 வயது நபர் தெரிவித்துள்ளார்.
அதாவது, அந்த நபருக்கு மன நல பிரச்சினைகள் இருப்பதாக கருதப்படுகிறது.
அந்த நபர் Jura மாகாணத்திலிருந்து Aarau மாகாணத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |