இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை: நாளை முதல் மீண்டும் ஆரம்பம்
அண்மையில் ஏற்பட்ட பாதகமான காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை (04) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமானது.
பின்னர் நாடளாவிய ரீதியில் சமூகங்களைப் பாதித்த தீவிர காலநிலை காரணமாக நவம்பர் 27 ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
அதன்படி நாளைய தினம் மீண்டும் பரீட்சை ஆரம்பமாகும் எனவும், ஏற்கனவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழமையான நேர அட்டவணையின்படி பரீட்சை தொடரும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பரீட்சை இடைநிறுத்தப்பட்ட திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்ட பாடங்கள் எதிர்வரும் நாட்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
குறித்த திகதிகள் தொடர்பான புதிய நேர அட்டவணை எதிர்வரும் நாட்களில் பரீட்சை நிலையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் என ஜயசுந்தர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |