கனடாவில் வீட்டுக்குள் இருந்து கைப்பற்றப்பட்ட சடலம்! கொலை என அறிவிப்பு
கனடாவில் வீட்டுக்குள் ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒரு கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹாலிபக்ஸில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் அங்குள்ள வீட்டில் நபர் ஒருவர் இறந்துகிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அங்கு அவர்கள் விரைந்தனர்.
இதையடுத்து அங்கு Vincent Lamont Beals (47) என்பவர் சடலமாக பொலிசாரால் மீட்கப்பட்டார்.
அவரின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இது கொலை என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சந்தேக மரணமானது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக யாருக்கேனும் தகவல் தெரிந்தாலோ அல்லது வீடியோ ஆதாரம் இருந்தாலோ தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.