தபால் பெட்டியிலிருந்த மர்ம பார்சல்: ஜெனீவாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
ஜெனீவாவிலுள்ள கட்டிடம் ஒன்றிற்கு மர்ம பார்சல் ஒன்று வந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனீவாவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
நேற்று, புதன்கிழமை காலை, ஜெனீவாவிலுள்ள கட்டிடம் ஒன்றிற்கு பார்சல் ஒன்று வந்தது. அதைத் தொடர்ந்து அங்கு ஃபெடரல் பொலிசார் குவிக்கப்பட்டார்கள்.
இப்படி பார்சல் ஒன்று வந்ததைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்படுவதற்குக் காரணம், Saint-Jean என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இதேபோன்றதொரு பார்சலில் வந்த குண்டு ஒன்று வெடித்தது.
பின்னர், Grange-Canal என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்த தபால் பெட்டி ஒன்றிலிருந்த பார்சல் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில், 12 வயது சிறுமி ஒருத்தி படுகாயமடைந்தாள்.
இந்நிலையில், தற்போது Rue de la Corraterie என்னுமிடத்தில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றிற்கு மர்ம பார்சல் ஒன்று வரவே, நேரடியாக ஃபெடரல் பொலிசாரே விசாரணையில் இறங்கிவிட்டார்கள்.
சமீபத்தில், ஜெனீவாவிலுள்ள Patek Philippe என்னும் கைக்கடிகார நிறுவன பணியாளர்களைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அந்நிறுவனம் மீது கடந்த சில ஆண்டுகளாக துன்புறுத்தல் மற்றும் தொல்லைகொடுத்தல் புகார்கள் அளிக்கப்பட்டுவருவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதல்களுக்கும் அதற்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆக, இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் அதே பகுதிக்கு ஒரு பார்சல் வரவே, பரபரப்பு உருவானது.
அந்த சம்பவங்களுக்கும், தற்போது இந்த பார்சல் அனுப்பப்பட்ட விடயத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |