222 ரன் வித்தியாசத்தில் வென்ற அணி! 9 விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர்
கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் போட்டியில் சஸ்செக்ஸ் அணி, 222 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லீசெஸ்டர்ஷைர் அணியை வீழ்த்தியது.
டாம் கிளார்க் 101 ஓட்டங்கள்
சஸ்செக்ஸ் மற்றும் லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான கவுண்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் டெஸ்ட் போட்டி நடந்தது.
திருமணம் முடிந்து ஒரே மாதத்தில்..ஐபிஎல்லில் பானங்களைத் தூக்கும் அர்ஜுன் டெண்டுல்கர்: வைரலாகும் வீடியோ
சஸ்செக்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 361 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. டாம் கிளார்க் 101 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய லீசெஸ்டர்ஷைர் 245 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஜேக் வெதரால்ட் 83 ஓட்டங்கள் விளாசினார்.
அணித்தலைவர் ஓலி ராபின்ஸன் (Ollie Robinson), ஹென்றி க்ரோகோம்ப் தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அடுத்து சஸ்செக்ஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 364 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜேக் கார்ஸன் 85 ஓட்டங்களும், டாம் ப்ரைஸ் 73 ஓட்டங்களும், டேனியல் ஹூக்ஸ் 72 ஓட்டங்களும் எடுத்தனர்.
481 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
அதனைத் தொடர்ந்து, லீசெஸ்டர்ஷைர் அணிக்கு 481 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய லீசெஸ்டர்ஷைர் அணியில் பென் காக்ஸ் (60), ஸ்டீபன் எஸ்கினஸி (54) இருவரும் அரைசதம் அடித்தனர்.
எனினும் ஏனைய வீரர்கள் சொதப்பியதால் லீசெஸ்டர்ஷைர் 258 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதால், சஸ்செக்ஸ் அணி 222 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
ஹென்றி க்ரோகோம்ப் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் கோல்ஸ் மற்றும் ஃபின் ஹட்ஸன் தலா 2 விக்கெட்டுகளும், ஜேக் கர்ஸன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |