228 ஓட்டங்கள் குவித்தும் டை ஆன போட்டி: கெத்து காட்டிய ரஹானேவின் படை
டி20 மும்பை தொடரில் நார்த் மும்பை பேந்தர்ஸ், பாந்த்ரா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி டை ஆனது.
சுவேத் பர்கர் சதம்
வான்கடே மைதானத்தில் நடந்த டி20 மும்பை போட்டியில், நார்த் மும்பை பேந்தர்ஸ் மற்றும் பாந்த்ரா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய பாந்த்ரா பிளாஸ்டர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் சுவேத் பர்கர் (Suved Parkar) 54 பந்துகளில் 110 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய நார்த் மும்பை பேந்தர்ஸ் அணியும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ஓட்டங்கள் குவித்தது.
இதன்மூலம் போட்டி டை ஆனது. அதிகபட்சமாக ஹர்திக் தாமோர் (Hardik Tamore) 39 பந்துகளில் 83 ஓட்டங்கள் விளாசினார். சாகர் சாபிரியா மற்றும் த்ருமில் ராத் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |