நீதிமன்ற தீர்ப்பை மீறி சுவெல்லாவும் பிரீத்தியும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு செய்த அநீதி...
நீதிமன்றத் தீர்ப்பை மீறி முன்னாள் உள்துறைச் செயலர்களான சுவெல்லா பிரேவர்மேனும், பிரீத்தி பட்டேலும் செய்த அநீதியான ஒரு விடயம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அது என்ன அநீதி?
1,600 புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு, அவர்கள் பிரித்தானியாவில் தங்கியிருக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை மீறி, முன்னாள் உள்துறைச் செயலர்களான சுவெல்லா பிரேவர்மேனும், பிரீத்தி பட்டேலும் ரகசிய கொள்கை ஒன்றை செயல்படுத்திவந்துள்ளது தெரியவந்துள்ளது.
கடத்தல்காரர்களால் கடத்திக் கொண்டுவரப்பட்டவர்கள் என்ற நிலைமையிலுள்ளவர்கள், பிரித்தானியாவில் தங்கியிருக்க தானாகவே அனுமதியளிக்கவேண்டும் என, 2021ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்ற தீர்ப்பு ஒன்று தெரிவிக்கிறது.
அப்படியிருக்கும் நிலையிலும், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டுள்ள 1,600 பேரை வேலை செய்யவோ, படிக்கவோ, சலுகைகளைப் பெறவோ அனுமதிக்காமல், இரண்டுங்கெட்டான் நிலைமையில் அவதியுறவிட்டதாக புதன்கிழமை, நீதிமன்றத்தில் உள்துறை அலுவலகம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்ந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்
பாதுகாப்பு கருதி பெயர் வெளியிடப்படாமல் XY என அறியப்படும் 22 வயது நபர் ஒருவர், தனக்கு 16 வயது இருக்கும்போது, அல்பேனியா நாட்டில், தன்னை போதைமருந்து விற்க கட்டாயப்படுத்திய கடத்தல்காரர்களிடமிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்ததாகவும், உள்துறை அலுவலகத்தின் ரகசிய கொள்கையால், தான் 18 மாதங்கள் பிரித்தானியாவில் தங்கியிருக்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
விசாரணையில், உள்துறை அலுவலகம் வேண்டுமென்றே இப்படிப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்களை இழுத்தடித்ததும், அவர்களுக்கு முடிவேதும் கூறாமல், உங்கள் புகலிடக்கோரிக்கையை மீளாய்வு செய்கிறோம் என்று கூறி வேண்டுமென்றே தாமதப்படுத்திக்கொண்டே வந்ததும் தெரியவந்துள்ளது.
வழக்கு தொடுத்துள்ளவர் சார்பில், இப்படி வெளியிடப்படாத ஒரு கொள்கையை ரகசியமாக பின்பற்றுவது சட்டவிரோதம் என வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |