தித்திக்கும் சுவையில் குழந்தைளுக்கு பிடித்த சுழியம்: எப்படி செய்வது?
பொதுவாக வீட்டில் ஏதேனும் பண்டிகை என்றால் இனிப்பு செய்வது என்பது வழக்கமான ஒன்று.
அதன்படி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சுழியத்தை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சுழியம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு- 1 கப்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- நெய்- 2 ஸ்பூன்
- தேங்காய்- ½ கப்
- வெல்லம்- 1½ கப்
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- பச்சரிசி- ½ கப்
- உளுந்து- 1 கப்
- உப்பு- 1 சிட்டிகை
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை சேர்த்து இரண்டு முறை கழுவி ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை குக்கரில் சேர்த்து வேகவைத்து மசித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் நெய் சேர்த்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி வெல்லம் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து இதில் ஏலக்காய் தூள் மற்றும் வேகவைத்து மசித்த கடலை பருப்பு சேர்த்து கெட்டியாக வரும்வரை கொதிக்கவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் பச்சரிசி மற்றும் உளுந்தை 2 முறை நன்கு கழுவி ஊறவைத்து மென்மையாக அரைத்து எடுத்து உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக கடலை பருப்பு கலவையை சிறிய உருண்டையாக பிடித்து அரைத்த மாவில் பிராட்டி எண்ணெய்யில் பொறித்து எடுத்தால் சுவையான சுழியம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |