தித்திக்கும் சுவையில் சுழியம்.., இலகுவாக எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த சுழியத்தை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சுழியம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு- 1 கப்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- நெய்- 2 ஸ்பூன்
- தேங்கய்- 2 ஸ்பூன்
- வெல்லம்- 1 கப்
- ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை
- அரிசி- 1 கப்
- உளுந்து- 1 கப்
- உப்பு- 1 சிட்டிகை
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் உளுந்து சேர்த்து நன்கு கழுவி 8 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து கடலை பருப்பை 2 முறை நன்கு கழுவி 3 மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு குக்கரில் ஊறிய கடலை பருப்பு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து நன்கு மசித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் நெய் சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து இதில் வெல்லம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து அதில் வேகவைத்து மசித்த கடலை பருப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, உளுந்தை நன்கு கெட்டியாக அரைத்து உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடலை பருப்பு கலவையை உருண்டை பிடித்து மாவில் நனைத்து பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுழியம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |