சினிமாவில் ஜாதி படம் எடுக்காதீர்கள்! எஸ்.வி சேகர்
ஜாதிகள் வைத்து படம் எடுக்கவேண்டாம் எனவும் இதை இயக்குனர் முத்தையா தான் ஆரம்பித்து வைத்தார் எனவும் பாஜக ஆதரவாளரும், வலதுசாரி சிந்தனையாளரும், முதல்வர் ஸ்டாலின் ஆதரவாளருமான எஸ்.வி.சேகர், நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியுள்ளார்.
ஜாதிகள் ஒழித்துவிட்டோம் என்று சொல்கிறோம் அனால் பள்ளிகளில் கூட எந்த ஜாதி என்று பார்க்குகிறார்கள்.
இதற்கு காரணம் சினிமா, சினிமா தான் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை இயக்குனர் முத்தையா தான் கொம்பன் படத்தில் ஆரம்பித்து வைத்தார். தன் ஜாதியை உயர்த்துவது தப்பில்லை, அடுத்த ஜாதியை விட தன் ஜாதி உயர்ந்தது என காட்டக் கூடாது.
ஜாதியை வைத்து படம் எடுப்பவர்கள், அந்த லாபத்தை ஜாதியை மேம்படுத்த செலவழிக்கிறார்களா?
நாங்குநேரியில் மாணவன் வெட்டப்பட்டிருக்கிறான். அந்த ஜாதியை வைத்து படம் எடுப்பவர்கள், அவங்க 20 லட்சம் ரூபாய் கொடுத்து, அந்த மாணவனுக்கு உதவலாமே! என்றும்
கொம்பன் முத்தையா, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் எல்லாருக்கும் இது பொருந்தும்,என்று அந்த பேட்டியில் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |