இந்தியாவின் தூய்மையான நகரம்: இந்தூரை பின்னுக்கு தள்ளிய நவி மும்பை
தூய்மையான நகரங்களை கண்டறியும் மத்திய அரசின் வருடாந்திர ஸ்வச் சர்வேஷன் இந்த ஆண்டில் மிகப்பெரிய மாற்றத்தினைக் கண்டுள்ளது
தூய்மையான நகரம்
ஒவ்வொரு ஆண்டும் தூய்மையான நகரம் என்ற பட்டியலில் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் முதலிடத்தில் காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மாறியுள்ளது.
ஸ்வச் சர்வேஷன் 2025 - 26 ஆண்டிற்கான தூய்மையான நகரமாக மகாராஷ்டிராவில் உள்ள நவி மும்பை நகரத்தினை நாட்டின் தூய்மையான நகரமாக தெரிவு செய்துள்ளது.
இந்நிலையில் எட்டு ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த இந்தூர் தற்போது இரண்டாவது, மூன்றாவது இடத்திற்கு கூட வரவில்லை.

இரண்டாவது இடத்தில் குஜராத்தின் சூரத் பகுதியும், மூன்றாவது இடத்தினை ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடாவும் பிடித்துள்ளது.
புது டெல்லியில் நவம்பர் 11ம் தேதி நடைபெற்ற ஸ்வச் சர்வேஷன் விருது விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி இந்த நகரங்களை கௌரவித்துள்ளார்.

நவி மும்பை வென்றது எப்படி?
நவி மும்பையின் இந்த வெற்றிக்கு ஜிபிஎஸ் போன்ற தொழில்நுட்பம் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அதாவது தெருக்களின் தூய்மை மட்டுமின்றி, கழிவுகளை சேர்த்து அதனை தரம்பிரிக்கவும் செய்கின்றது.
அதுமட்டுமின்றி தரம் பிரித்துள்ள குப்பையினை மறுசுழற்சி செய்யவும், அறிவியல் பூர்வமாக அதனை அகற்றுவது என்று செயல்பட்டுள்ளது.
மேலும் நவி மும்பை மாநகராட்சியானது தொழில்நுட்பத்தினையும், குடிமக்களையும் நகர நிர்வாகத்தில் ஒருங்கிணைத்து, இவ்வாறான தூய்மை தினசரி நிர்வாக பொறுப்பாகவே மாறியுள்ளது.

தீவிர செயல்பாடு என்ன?
மாநகராட்சியின் கட்டுப்பாடு மையத்திலிருந்து குப்பை சேகரிப்பு வாகனத்தின் இருப்பிடத்தினையும், செயல்பாடுகளையும் ஜிபிஎஸ் மூலமாக கண்காணிக்கப்படுகின்றது.
MyNMMC செயலி மற்றும் குடிமக்கள் குறைதீர்ப்பு இணையதளம் மூலமாக மக்களின் புகார்களை தெரிந்து கொண்டு அதற்கு தீர்வு கொடுத்துள்ளது.
வீடுகள் மற்றும் பிற இடங்களில் சேகரிக்கப்படும் கழிவுகளை வகைக்பபடுத்தப்படுவது முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அதாவது கழிவுகளை வெவ்வேறாக பிரித்து விடுகின்றனர்.

மேலும் மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளான சாலைகள், நடைபாதைகள், மேம்பாலங்கள் இவற்றினை தவறாமல் சுத்தம் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் தூய்மை பிரச்சாரங்கள் பள்ளிகள், கல்லூரிகள், இளைஞர்கள் மற்றும் குடியிருப்பு சங்கங்கள் இவற்றின் மூலமாக குடிமக்களையும் இதில் ஈடுபடுத்துவதற்கு முயற்சிகள் செய்துள்ளனர்.

நவி மும்பையின் சாதனை
நவி மும்பை நகரமானது குப்பைகள் இல்லாத நகரமாக இருந்ததற்காக ஏழு நட்சத்திர மதிப்பீட்டையும், வாட்டர் பிளஸ் சான்றிதழையும் பெற்றுள்ளது.
இந்த நகரில் கழிவுநீர் சுத்தகரிப்பு மற்றும் கழிவுநீர் மேலாண்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இந்த மாநகராட்சி, போலாபூரில் துணி மீட்பு மையத்தையும் நிறுவியுள்ளது.
அதாவது பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆடைகளை சேகரித்து அவற்றினை மீண்டும் பயன்படுத்த மறுசுழற்சி செய்யவும் உதவுகின்றது. இவை நாட்டிலேயே முதல் மாநகராட்சி மையம் என்றும் கூறப்படுகின்றது.

8 ஆண்டுகளாக வெற்றி பெற்ற இந்தூர்
இந்தூர் நகரம் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள நிலையில் 2017ம் ஆண்டில் முதன்முறையாக நாட்டின் தூய்மையான நகரமாக ஆனது.
இந்த நிலையை தக்கவைப்பதற்கு வீடுவீடாக சென்று குப்பை கழிவுகளை சேகரிப்பது, குப்பைகள் உருவாகும் இடத்திலேயே தரம் பிரிப்பது இவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.
2016ம் ஆண்டு இந்தூர் மாநகராட்சி 85 வார்டுகளில் இரண்டு வார்டு மட்டும் வீடுவீடாக குப்பை சேர்க்கும் முறையை அறிமுகப்படுத்திய நிலையில், அதே ஆண்டின் இறுதிக்குள் இந்த முறையை அனைத்து வார்டுக்கும் விரிவாக்கியது.

கழிவுகளை ஆறு வகைகளாக பிரித்து செயல்பட்டதுடன், ஜிபிஎஸ் மூலமாக கண்காணிக்கப்படவும், பொது இடங்களில் குப்பைகளை கொட்டி அவற்றின் தரத்தினை பிரிக்காதவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படுமாம்.
மேலும் ஈரக் கழிவுகளிலிருந்து பயோ சிஎன்ஜி தயாரிக்கும் ஆலை நிறுவப்பட்டு, கழிவிலிருந்து எரிபொருள் உற்பத்தி செய்து, இதனை நகர நேருந்துகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. ஆக மொத்தம் குப்பை உருவாகுவது முதல் அதனை இறுதியாக அகற்றுவது வரை முழுமையான அமைப்பாக செயல்பட்டு வந்துள்ளது.

இந்தூர் இப்போது சுத்தமாக இல்லையா?
இந்தூர் தனது முதலிடத்தினை இழந்ததால், அந்நகரின் தூய்மை மோசமாகிவிட்டதாக பலரும் நினைத்திருப்பார்கள்.
ஆனால் காரணம் என்னவெனில் இந்த ஸ்வச் சர்வேஷனில் தரவரிசைப்படுத்தும் முறைகளும், பிரிவுகளும் மாற்றப்பட்டுள்ளது.
வழக்கமான நகரங்களுடன் போட்டியிடுவதற்காக பதிலாக, துய்மையான நகர ஜோடி என்று நடத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் இந்தூர் கூட்டாளர் நகரமான தேபால்பூர் இரண்டாவது இடத்தை பிடித்தது.
இவ்வாறான செயல்பாட்டால் ஒரு நகரம் மட்டுமின்றி மற்ற நகரங்களும் சற்று முன்னேற்றம் அடையும் என்று கூறப்படுகின்றது. இந்தமுறை வேறு கோணத்தில் மதிப்பிடப்பட்தே இந்தூர் வராமல் இருந்ததற்கு காரணம் ஆகும்.

மும்பை, நவி மும்பை
நவி மும்பை மும்பையின் ஒரு பகுதியாக அல்லது புறநகர்ப் பகுதியாக கருதப்படும் நிலையில், நிர்வாகம் மற்றும் நகர திட்டமிடுதலைப் பொறுத்தவரை இரண்டும் தனித்தனி நகரமாகும்.
மும்பையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நகரத்தின் இடப்பற்றாக்குறை ஆகியவற்றினை கருத்திக் கொண்டு நவி மும்பையை தூணை நகரமாக உருவாக்க திட்டம் தீட்டப்படுள்ளது.
ஆனால் இரு நகரங்களும் தனித்தனி நிர்வாகத்தினை கொண்டுள்ளது. மும்பை பிருஹன்மும்பை மாநகராட்சியாலும், நவி மும்பை, நவி மும்பை மாநகராட்சியாலும் நிர்வகிக்கப்படுகின்றது.

ஸ்வச் கணக்கெடுப்பு எவ்வாறு கவனிக்கிறது?
ஸ்வச் கணக்கெடுப்பில் நகரங்கள் எவ்வாறு மதிப்பெண் பெறுகின்றது என்றால் வீட்டு கழிவுகளை தவறாமல் சேரிப்பது.
கழிவுகளை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்துவிடுவது, திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றுதல், தெரு மற்றும் பொது இடத்தில் தூய்மையை பராமரிப்பது, பொது மற்றும் சமுதாய கழிப்பறைகள் கிடைப்பதை உறுதி செய்துவது.

மேலும் கழிவுநீர் தொட்டியை பாதுகாப்பாகவும், இயந்திரம் மூலமாகவும் சுத்தம் செய்வது, பயன்படுத்தப்பட்ட நீரை நீர்வகிப்பது, சுகாதாரம் குழித்த பொது விழிப்புணர்வு, துப்புரவு பணியாளர் பாதுகாப்பு மற்றும் நலன், குடிமக்களின் புகார் மற்றும் ஆலோசனைகள் மீது நடவடிக்கை எடுப்பதை வைத்து மதிப்பெண் கொடுக்கப்படுகின்றதாம்.
ஸ்வச் சர்வேஷன் என்பது மத்திய வீட்டு வசதி மற்றும் நகரிய விவகாரங்கள் அமைச்சகத்தால் நடத்தப்படுகின்றதாம். நகரங்களின் தூய்மை, கழிவு மேலாண்மை, சுகாதார வசதியினை மதிப்படுவதே இதன் நோக்கமாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |