சமாதியில் இருக்கும் சாமியார் நித்தியானந்தா! அங்கிருந்து எழுந்தால் நடக்கப்போவது... சீடர்கள் முக்கிய தகவல்
நித்தியானந்தா ஆன்மிக பயிற்சி வகுப்பை சீர்குலைக்கவே அவர் பற்றி வதந்தி பரப்பப்படுவதாக சீடர்கள் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.
பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார்.
ஆனால் நித்யானந்தா, கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார். அவரது பக்தர்களுக்கு அடிக்கடி இணையதளத்தில் தோன்றி உரையாற்றியும் வருகிறார்.
இந்த நிலையில் நித்யானந்தா இறந்துவிட்டதாக இணையதளங்களில் செய்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா தரப்பில் இருந்து சில சமூகவலைதள பதிவுகள் வெளியாகி வருகின்றன.
ஒரு பதிவில் நான் இறந்துவிட்டதாக சிலர் புரளிகளை கிளப்பி வருகிறார்கள். நான் தற்போது சமாதியில் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை. பேசும் திறன் இல்லை எனக்கு உடல்நிலை சரியில்லை.
27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர் என ஒரு பதிவில் கூறியிருந்தார். இதனிடையில் மற்றொரு பதிவு நித்யானந்தா சமாதியில் இருப்பதால் அவரது பேஸ்புக் பக்கத்தில் சீடர்களால் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் வருடத்தில் பல நாட்கள் சாமி சமாதியில் தான் இருப்பார். சமாதியில் இருந்து எழுந்த பின், ஆன்மிக பயிற்சி வகுப்புகள் எடுப்பார். அடுத்தமாதம் சுவாமிஜி 21 நாள் ஆன்மிக வகுப்பு ஒன்றை ஆன்லைன் மூலமாக எடுக்கபோகிறார்.
இந்த ஆன்மிக பயிற்சி வகுப்பை சீர்குலைக்கவே இதுபோன்ற வதந்தியை பரப்பி வருகின்றனர். பயிற்சி வகுப்பிற்காக சாமி சமாதி நிலைக்கு சென்றிருப்பதால் இப்பொழுது பேசமாட்டார் என்று தெரிந்துகொண்டு தேவையில்லாத வதந்தியை அவர்கள் இஷ்டத்திற்கு பரப்பி வருகின்றனர்.
இந்து விரோதிகளை ஒழிக்காமல் அண்ணாமலையாரின் ஆட்டம் முடியாது. திரும்பி வந்துடாருன்னு போய் சொல்லு... திருவண்ணாமலை-அருணாச்சலம்-நித்யானந்தா என்று கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஆளே மாறிப்போன நித்யானந்தா புகைப்படங்களை பார்த்த பல நெட்டிசன்களும் அவரின் உடல் நலனை விசாரித்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021