கோல் மழை பொழிந்த ஸ்வீடன்! யூரோ தகுதிச்சுற்றில் முதல் வெற்றி
அஜர்பைஜான் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்வீடன் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
ஸ்வீடன் மிரட்டல்
யூரோ 2024 தகுதிச்சுற்றின் இன்றைய போட்டியில் ஸ்வீடன் - அஜர்பைஜான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் ஸ்வீடனின் எமில் போர்ஸ்பெர்க் முதல் கோல் அடித்தார்.
இதன்மூலம் ஸ்வீடன் அணி முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
கோல் மழை
அதன் பின்னர் தொடங்கிய இரண்டாம் பாதியில் அஜர்பைஜான் அணி வீரர் பஹ்லுல் சுயகோல் போட்டதால், ஸ்வீடன் அணியின் கோல் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.
@REUTERS
அதனைத் தொடர்ந்து ஸ்வீடனின் விக்டர் 79வது நிமிடத்திலும், ஜஸ்பிர் கார்ல்ஸோன் 88வது நிமிடத்திலும், அந்தோணி இலங்கா 89வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
இறுதிவரை அஜர்பைஜான் அணியால் கோல் அடிக்க முடியாததால், கோல் மழை பொழிந்த ஸ்வீடன் 5-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றி பெற்றது.
@REUTERS
@REUTERS