2026 ஃபிபா உலகக்கிண்ணம்: 5 கோல்கள் அடித்து சுவீடன் அபார வெற்றி..ஆடுகளத்தை முத்தமிட்ட வீரர்
ஃபிபா உலகக்கிண்ணப் போட்டியில் சுவீடன் அணி 5-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது.
யாசின் அயாரி கோல்
எஸ்டாடியோ மான்டெர்ரெய் மைதானத்தில் நடந்த குரூப் F போட்டியில் சுவீடன் மற்றும் துனிசியா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் சுவீடன் வீரர் யாசின் அயாரி கோல் அடித்தார். உலகக்கிண்ணத்தில் தனது முதல் கோலினை அடித்த யாசின், உணர்ச்சிமிகுதியில் ஆடுகளத்தை முத்தமிட்டார்.
அதனைத் தொடர்ந்து, 30வது நிமிடத்தில் மற்றொரு சுவீடன் அலெக்ஸாண்டர் ஐசாக் கோல் அடிக்க, 43வது நிமிடத்தில் துனிசிய வீரர் ஓமர் ரெக்கிக் கோல் அடித்தார்.
சுவீடன் வெற்றி
அதன் பின்னர் சுவீடனின் விக்டர் 59வது நிமிடத்திலும், மாத்தியஸ் 84வது நிமிடத்திலும் கோல் அடிக்க, சுவீடன் அணி 5-1 என்ற கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது.

பிலடெல்பியாவில் நடந்த குரூப் E போட்டியில், ஐவரி கோஸ்ட் அணி 1-0 என்ற கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது.
நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகள் மோதிய போட்டி 2-2 என டிராவில் முடிந்தது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |