கடைசி நொடி கோல் அறிவிப்பால் திரில் வெற்றி பெற்ற ஸ்வீடன்! உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய அமெரிக்கா
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்வீடன் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
கடைசிவரை விழாத கோல்
மெல்போர்ன் ரெக்டாங்குலர் மைதானத்தில் நடந்த போட்டியில் ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின.
??? ????? ?
— beIN SPORTS (@beINSPORTS_EN) August 6, 2023
The moment referee Stéphanie Frappart tells Lina Hurtig that her goal has gone over the line meaning that Sweden dumps out defending champions USA 5-4 on penalties! #FIFAWWC #beINWWC23 #beINSPIRED pic.twitter.com/T915Ls7KCO
இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் கடைசி வரை கோல் எதுவும் விழவில்லை. இதனால் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இரு அணி வீராங்கனைகளும் அடித்த ஷாட்கள் கோல் வலைக்குள் செல்லவில்லை.
கோல் அறிவிப்பு
இந்நிலையில் ஸ்வீடன் வீராங்கனை ஹர்டிங் அடித்த ஷாட்டை அமெரிக்க கோல் கீப்பர் தடுத்தார். ஆனால் மூன்றாம் நடுவர் Check செய்தபோது பந்து வலைக்குள் விழுந்திருக்கும் என்பதாலும், கோல் கீப்பர் கோட்டினை தொட்டு பந்தை தடுத்ததாலும் அது கோல் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ஸ்வீடன் அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இதனைத் தொடர்ந்து 11ஆம் திகதி நடைபெற உள்ள போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது ஸ்வீடன்.
தோல்வியுற்றதால் அமெரிக்க அணி உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது. உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் அமெரிக்க அணி அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது இது தான் முதல் முறை ஆகும்.
Twitter
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |