தமிழ்நாட்டில் முதலீடு செய்ய சுவீடன் நிறுவனங்கள் ஆர்வம்
தமிழ்நாட்டில் முதலீடு செய்ய சுவீடனைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் முதலீடு
வரும் 2030 -ம் ஆண்டிற்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலர் (ரூ.84 லட்சம் கோடி) பொருளாதார மாநிலமாக மாற்ற தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இதனால், தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் முயற்சியில் அதிகாரிகள் உள்ளனர்.
அந்தவகையில், இன்று தொழில் துறை அமைச்சர் ராஜா, வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு ஆகியோர் தமிழகத்தில் முதலீடு செய்ய வரவேண்டும் என்று சுவீடன் நாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கான சுவீடன் நாட்டு துாதர் ஜேன் தெஸ்லெப் மற்றும் ஸ்வீடனை சேர்ந்த 14 நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இந்நிலையில், டிரெல்போர்க் மெரைன் சர்வீசஸ், சாப், கேம்ஃபில் மற்றும் ஐகியா ஆகிய 4 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவிப்பதாக சுவீடன் நாட்டு தூதர் ஜான் திஸ்லெஃப் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள 70 சுவீடன் நிறுவனங்களில் 25,000 பேர் பணிபுரிகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் சுவீடன் நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |