தித்திக்கும் சுவையில் இனிப்பு போண்டா.., எப்படி செய்வது?
வடை, போண்டா என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அதுவும் மாலை நேரத்தில் டீயுடன் வடை, போண்டாவை சேர்த்து சாப்பிட அவ்வளவு நிறைவாக இருக்கும்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் இனிப்பு போண்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வாழைப்பழம்- 2
- வெல்லம்- 2 ஸ்பூன்
- தேங்காய் துண்டுகள்- 1 ஸ்பூன்
- பேரீட்சைப்பழம்- 4
- முந்திரி- 10
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- கோதுமை மாவு- 1 கப்
- நெய்- 1 ஸ்பூன்
- சமையல் சோடா- 1 சிட்டிகை
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைப்பழம், வெல்லம், தேங்காய் துண்டுகள், விதை நீக்கிய பேரிச்சம்பழம் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின் இதில் நறுக்கிய முந்திரி, ஏலக்காய் தூள், கோதுமை மாவு மற்றும் நெய் சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

அடுத்து இதில் சமையல் சோடா சேர்த்து கலந்து 15 நிமிடம் மூடி போட்டு அப்படியே வைக்கவும்.
இதற்கடுத்து வாணலில் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு சூடுபடுத்தவும்.
இறுதியாக மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான இனிப்பு போண்டா தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |