நாவூறும் Sweet Corn அல்வா
Healthy Food Recipes
Honey
By Kirthiga
பொதுவாகவே இனிப்பு வகை என்றால் அனைவருக்கும் பிடிக்கும் தான். அதிலும் அல்வா என்றால் பிடிக்காதவர்கள் யாரும் உண்டோ?
இதை வீட்டிலேயே செய்வது ஒரு கடினமாக வேலை இல்லை.
ஆகவே வித்தியாசமாக ஒரு பொருளை வைத்து எப்படி அல்வா செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
மக்காச் சோள மாவு – 1 கப்
-
தண்ணீர் – 3 கப்
-
சர்க்கரை – 2 கப்
- எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
- ஏலக்காய்ப் பொடி – 1 டீஸ்பூன்
-
நெய் – 1 டீஸ்பூன்
- முந்திரி – 1 டீஸ்பூன்
- திராட்சை – 1 டீஸ்பூன்
- கேசரி பவுடர் – தேவையான அளவு
செய்முறை
-
முதலில் மக்காச் சோள மாவுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் மீதமுள்ள தண்ணீர் சேர்த்து பாகு பதத்திற்கு கிளற வேண்டும்.
- பாகு பதம் வந்தவுடன், அதனுடன் சோள மா, முந்திரி, திராட்சை, கேசரி பவுடர், நெய், எலுமிச்சை சாறு மற்றும் ஏலக்காய்ப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.
- இறுதியாக ஒரு தட்டில் நெய் சேர்த்து இந்த கலவையை சேர்த்து முந்திரி துண்டுகளை தூவி அலங்கரித்து எடுத்தால் சுவையான Sweet Corn அல்வா ரெடி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US