நாவூறும் சுவையில் இனிப்பு பராத்தா.., எப்படி செய்வது?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த இனிப்பு பராத்தாவை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் இனிப்பு பராத்தாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு - 2 கப்
- உப்பு - ¼ ஸ்பூன்
- நெய் - 2 ஸ்பூன்
- பாதாம் - 1 கப்
- வெல்லம் - 1 கப்
- ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்
- நெய் - 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, நெய் சேர்த்து கலந்து வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து பிசையவும்.
பின் மாவை நன்கு 5 நிமிடம் பிசைந்து நெய் தடவி 30 நிமிடம் ஊறவிடவும்.
அடுத்து பாதாமை ஒரு கடாயில் சேர்த்து மிதமான தீயில் வறுத்து ஆறவிட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

இதற்கடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லம், அரைத்த பாதாம் தூள், ஏலக்காய் தூள், நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
பின்னர் பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கல்லில் வைத்து திரட்டவும்.
திரட்டிய மாவின் மேல் பாதாம் கலவையை வைத்து, மாவின் அனைத்து பக்கங்களையும் சேர்த்து மூடி மாவை சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக திரட்டவும்.
இறுதியாக திரட்டிய மாவை சூடான தோசை கல்லில் சேர்த்து, நெய் ஊற்றி வேகவைத்து எடுத்தால் இனிப்பு பராத்தா தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |