குழந்தைகளுக்கு பிடித்த சத்தான செவ்வாழை இனிப்பு தோசை.., எப்படி செய்வது?
Sweet red banana dosa- செவ்வாழை சாதாரண மஞ்சள் வாழைப்பழங்களை விட அதிக சத்துக்களையும், குறைவான கிளைசெமிக் குறியீட்டையும் கொண்டது.
இதில் பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6, ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த செவ்வாழை பெண்களின் மாதவிடாய், கர்ப்பகாலம் மற்றும் சரும நலனுக்கு உதவுகின்றன.
அந்தவகையில், உடலிற்கு சத்தான செவ்வாழையில் இனிப்பு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- செவ்வாழை- 2
- ரவை- ¾ கப்
- சிவப்பு அவல்- ¾ கப்
- தயிர்- ¾ கப்
- நாட்டு சர்க்கரை- ¼ கப்
- ஏலக்காய் தூள்- 1 சிட்டிகை
- உப்பு- 1 சிட்டிகை
- நெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் செவ்வாழை, ரவை, ஊறவைத்த சிகப்பு அவல், தயிர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பின் இதில் ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு தோசை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணல் வைத்து சூடானதும் அரைத்த மாவை தோசை போல் ஊற்றவும்.
இறுதியாக இதில் நெய் சேர்த்து பொன்னிறமாக இரண்டு பக்கமும் சுட்டு எடுத்தால் சத்தான செவ்வாழை தோசை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |