Sweet Ulundhu vadai: உடல் வலுவிற்கு சத்தான இனிப்பு உளுந்து வடை: ரெசிபி இதோ
வடை என்றால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மழைநேரத்தில் மாலைப்பொழுதில் டீயுடன் வடை வைத்து சாப்பிடவே அவ்வளவு நிறைவாக இருக்கும்.
அந்தவகையில் வித்யாசமான சுவையில் ஆரோக்கியமான இனிப்பு உளுந்து வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- ¼ கப்
- வெள்ளை உளுந்து- ¾ கப்
- வெல்லம்- ¾ கப்
- ஏலக்காய்- 2
- உப்பு- ¼ ஸ்பூன்
- தேங்காய்- ½ கப்
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் கருப்பு உளுந்து மற்றும் வெள்ளை உளுந்தை 2- 3 முறை நன்கு கழுவி 1 மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்துக்கொள்ளவும்.
அதன் பின் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 3 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வெல்ல பாகை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கிரைண்டரில் வெல்லப்பாகு சேர்த்து சுத்தவிட்டு பின் இதில் ஊறவைத்த உளுந்தை சேர்த்து அரைத்து பின் இதில் ஏலக்காய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
மாவு நன்கு அரைந்து வந்ததும் அதில் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதில் அரிசி மாவு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் மிதமான தீயில் வைத்து மாவை வடை போல் தட்டி சுட்டு எடுத்தால் சுவையான இனிப்பு உளுந்த வடை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |