மிகப்பெரிய நகர்வு... முகேஷ் அம்பானிக்கு சவால் விடும் Swiggy
உணவு மற்றும் மளிகை விநியோக சேவை நிறுவனமான Swiggy தற்போது ரூ 11,300 கோடி தொகையை திரட்டும் வகையில் பொதுத்துறை நிறுவனமாக உருவாக உள்ளது.
Swiggy-ன் ரூ 11,300 கோடி IPO
இதன் முதற் நகர்வாக இந்தியாவின் SEBI அமைப்பிடம் தங்களின் செயல்பாடுகள், நிதி மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பான வாய்ப்புகள் பற்றிய தகவல்களை குறிப்பிடும் RHP என்ற ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
Swiggy-ன் ரூ 11,300 கோடி IPO என்பது மிகப்பெரிய நகர்வாக பார்க்கப்படுகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் உட்பட Blinkit, Zepto ஆகிய பிரபலமான நிறுவனங்களின் சவால்களையும் Swiggy எதிர்கொண்டு வருகிறது.
IPO திட்டத்தின் ஒருபகுதியாக திரட்ட திட்டமிட்ட முதலீடு தொகையை ரூ 3,750 கோடியில் இருந்து ரூ 4,499 கோடி என Swiggy அதிகரித்துள்ளது. இந்த ரூ 1,179 கோடி தொகையானது Swiggy-ன் இன்னொரு பிரிவான Instamart நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.
வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவான சேவையை அளிப்பது என்ற கொள்கையை Swiggy மற்றும் Blinkit வகுத்துள்ள நிலையில், தற்போது மிகப்பெரும் சவாலாக ரிலையன்ஸ் உருவெடுத்துள்ளது.
புதிதாக 150 மில்லியன் டொலர்
10ல் இருந்து 30 நிமிடங்களுக்குள் என்ற உறுதியை தங்களின் சில்லறை வணிகங்கள் ஊடாக ரிலையன்ஸ் சாத்தியப்படுத்த உள்ளது. Zepto நிறுவனத்தின் செயல்பாடுகள் முதலீட்டாளர்களை கவர, தற்போது அந்த நிறுவனம் புதிதாக 150 மில்லியன் டொலர் தொகையை முதலீடாக பெற்றுள்ளது.
இந்த நிலையில் புதிய நகரங்களில் குத்தகை மற்றும் உரிமம் பெறுவதற்காக Swiggy நிறுவனம் ரூ 423.3 கோடி தொகையை முதலீடு செய்ய உள்ளது. மட்டுமின்றி, தங்களின் விநியோக மையங்களை விரிவாக்கம் செய்ய ரூ 755.4 கோடி செலவிட உள்ளது.
இதனால் மொத்த விநியோக மையங்களின் எண்ணிக்கை 741 என அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. Blinkit நிறுவனம் தங்களின் விநியோக மையங்களின் எண்ணிக்கையை 791 என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |