IPOவில் களமிறங்கிய Swiggy: ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிய 500 ஊழியர்கள்
முதல் முறையாக பங்குச்சந்தையில் களமிறங்கிய Swiggy நிறுவனத்தால், அதன் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள் 500 பேர்கள் கோடீஸ்வரர்கள் வரிசையில் இணைந்துள்ளனர்.
பங்குகளை வழங்கும் திட்டம்
நவம்பர் 13ம் திகதி முதல் Swiggy நிறுவனம் பங்குச்சந்தையில் களமிறங்கியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக ESOP என அறியப்படும் பணியாளர் பங்கு உரிமைத் திட்டத்தை அதன் 5000 ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, அந்த நிறுவனத்தில் பணியாற்றும் காலத்தை பொறுத்து ஊழியர்களுக்கு பங்குகளை வழங்கும் திட்டம். இந்த திட்டத்திற்காக ரூ 9000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த 5000 ஊழியர்களில், இன்னாள் மற்றும் முன்னாள் ஊழியர்களும் உட்படுவார்கள். ஒரு பங்கின் அடிப்படை விலை ரூ 390 என முடிவு செய்துள்ள நிலையில், இந்த 5000 ஊழியர்களில் 500 பேர்கள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைவார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
நண்பர் கட்டாயப்படுத்தியதால் ரூ 50,000 முதலீடு செய்த நபர்.... இன்று அவரது சொத்து மதிப்பு ரூ 18,480 கோடி
IPO என்பது
நவம்பர் 13ம் திகதி மும்பை பங்குச்சந்தையில் Swiggy பங்குகள் ரூ 412 என பட்டியலிடப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக 5.64 சதவிகிதம் ஏற்றம் கண்டது. புதன்கிழமை Swiggy பங்குகளின் விலை ரூ 419.95 என பதிவானது.
நவம்பர் 16ம் திகதி சனிக்கிழமை Swiggy பங்குகளின் விலை ரூ 421.60 என பதிவாகியுள்ளது. IPO என்பது ஆரம்பப் பொது வழங்கல் என்பதன் சுருக்கமாகும். ஆரம்பப் பொது வழங்கல் என்பது வணிக நிறுவனங்கள், மூலதனம் திரட்டுவதற்காகவும், வணிக விரிவாக்கத்திற்காக நிதி திரட்டுவதற்காகவும் தெரிவு செய்யும் வழியின் ஒரு பகுதியாகும். இது பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு முறையாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |