Zomato-க்கு போட்டியாக ticketing சேவையை அறிமுகப்படுத்தியுள்ள Swiggy
உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி (Swiggy) Scenes எனும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் சேவையை அளிக்கும் என கூறப்படுகிறது.
Swiggy சமீபத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில், நிகழ்வு மற்றும் டிக்கெட் வணிகத்தை மேம்படுத்துவதற்காக இந்த சேவையைத் தொடங்கியுள்ளது.
ஸ்விக்கி இந்த சேவையை அதன் டைன்-அவுட் பிரிவில் சேர்த்துள்ளது.
ஸ்விக்கி செயலியின் டைனவுட் பிரிவு தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு பார்ட்டி, லைவ் மியூசிக் மற்றும் டிஜே நைட்ஸ் போன்ற நிகழ்வுகளை பட்டியலிடுகிறது, மேலும் அவற்றுக்கான டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன.
இந்த சேவை தற்போது மும்பை மற்றும் பெங்களூரில் நடக்கும் நிகழ்வுகளுக்கு டிக்கெட் புக்கிங் செய்கின்ற. விரைவில் இது மற்ற நகரங்களிலும் இயங்கும்.
iOS மற்றும் Android பயனர்களுக்காக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Zomato-வின் District செயலியுடன் நிறுவனம் போட்டியிடும்.
திரைப்படங்கள், விளையாட்டுகள், நிகழ்வுகள் மற்றும் உணவகங்களில் உங்கள் அட்டவணையை முன்பதிவு செய்வது போன்ற வசதிகளை District App வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Swiggy Scenes, Zomato Disrict