ஸ்விக்கி, ஸ்மோட்டோ ஊழியர்கள் வேலைநிறுத்தம் - டெலிவரி சேவையில் பாதிப்பு
ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற டெலிவரி ஊழியர்களின் வேலைநிறுத்ததால் டெலிவரி சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெலிவரி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.18, CNG கிலோ ரூ.2 உயர்த்துவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால், பல்வேறு துறைகளிலும் விலை உயர்வு ஏற்பட உள்ளது. பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறவேண்டுமென பல்வேறு தரப்பில் இருந்து குரல் எழுந்துள்ளது.
இந்த பெட்ரோல் விலை உயர்வு, ஸ்விக்கி, ஸ்மோட்டோ, பிளிங்க்இட், செப்டோ போன்ற டெலிவரி சேவைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்த வேண்டும் எனக்கூறி டெலிவரி ஊழியர்களோ நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

இதன்படி, இன்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை செயலியை அணைத்து வைத்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இதன் காரணமாக 5 மணி நேரத்திற்கு டெலிவரி சேவையில் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.
இது குறித்து கிக் மற்றும் பிளாட்பார்ம் சேவைத் தொழிலாளர் சங்கம் (GIPSWU) வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெட்ரோல் விலை உயர்வால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஏற்ற சலுகைகள் வழங்க வேண்டும்.
Rising petrol, diesel & LPG prices are directly affecting gig workers across India.
— GIPSWU - Gig & Platform Service Workers Union (@GIPSWU_) May 15, 2026
GIPSWU demands fair per-kilometre rates for delivery workers & drivers.
Appeal for temporary app shutdown tomorrow from 12 PM to 5 PM.#GIPSWU @PTI_News @the_hindu @htTweets @timesofindia pic.twitter.com/y5aECETQii
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்விகி, ஸொமேட்டோவில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள் இன்று மதியம் 12 மணி முதல் 5 மணி வரையில் தங்கள் சேவைகளை நிறுத்திக் கொண்டு ஸ்ட்ரைக்கில் ஈடுபட வேண்டும்" என அழைப்பு விடுத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |