சுவிஸ் நகரம் ஒன்றில் ஆற்றில் நீச்சலடித்து பணிக்குச் செல்லும் மக்கள்: ஒரு சுவாரஸ்ய செய்தி
போக்குவரத்துக்கு எத்தனையோ வசதிகள் வந்துவிட்ட நிலையிலும், சுவிஸ் நகரம் ஒன்றில் வாழும் மக்களில் சிலர், இப்போதும் பணிக்குச் செல்வதற்காக ஆற்றில் நீச்சலடித்துச் செல்வதாக கூறப்படுவதுண்டு.
அந்த செய்தி உண்மையா?
ஆம், சூரிச் நகரில் வாழும் சிலர், Limmat என்ற நதியில் நீந்தி பணிக்குச் செல்வது உண்மைதானாம்...
ஜேர்மன் பத்திரிகையான Welt பத்திரிகையில், 2022 ஜூலை, அதாவது இம்மாத வெளியீட்டில், சூரிச் மக்கள் பணிக்குச் செல்வதற்கு ஆற்றில் நீந்திச் செல்வதாக ஒரு கட்டுரையில் குறிபிடப்பட்டுள்ளது.
Image - thelocal
சூரிச்சில் வாழும் சிலர் தங்கள் பணிக்குக்கூட நீந்தித்தான் செல்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள அந்த கட்டுரை, அவர்கள் தண்ணீர் புகாத பை ஒன்றில் மாற்று உடைகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களைக் கட்டிவைத்துக்கொண்டு நீந்தி வருவதைப் பார்க்கும்போதே, அவர்கள் பணிக்குச் செல்கிறார்கள் என்பது புரிந்துவிடும் என குறிப்பிட்டுள்ளது.
சூரிச் நகரில் வாழும் வெகு சிலரே இப்படி ஆற்றில் நீச்சலடித்து பணிக்குச் செல்கிறார்கள் என்றாலும், அப்படி ஒரு விடயம் இருப்பது உண்மைதான்.
Image - thelocal