பிரான்சில் வீடுகளில் நீச்சல் குளங்கள்: மில்லியன்களைத் தொட்ட எண்ணிக்கை
பிரான்சில், 2025ஆம் ஆண்டில் மட்டும், சுமார் 90,600 வீடுகளில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாக பல நாட்டவர்களைப் போல பிரான்ஸ்
நாட்டு மக்களும் கோடை விடுமுறையை வெளிநாடுகளில் செலவிடுவதுண்டு.
ஆனால், உலகில் நிலவும் போர்ச்சூழல், எரிபொருள் விலை உயர்வு போன்ற விடயங்கள், பிரான்ஸ் மக்களின் எண்ணங்களில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன.

வீடுகளில் நீச்சல் குளங்கள் ஆம், வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு பதிலாக, இந்த கோடையை தங்கள் வீடுகளிலேயே செலவிட முடிவு செய்துள்ளார்கள் பிரான்ஸ் நாட்டவர்கள் பலர். கோடையில் நீச்சல் குளங்களில் குளிப்பதற்காக ஏராளமானோர் தங்கள் வீடுகளிலேயே நீச்சல் குளங்களை அமைத்துள்ளார்கள்.
2025இல், தங்கள் வீடுகளில் தனிப்பட்ட முறையில் நீச்சல் குளங்களை அமைத்துள்ளவர்கள் எண்ணிக்கை 3.7 மில்லியனாக உயர்ந்துள்ளது.
வீடுகளில் நீச்சல் குளங்கள் அமைப்பதற்கு, சாதாரண நீச்சல் குளங்கள் என்றால், 5,000 யூரோக்கள் முதல் 10,000 யூரோக்களும், உயர்தர நீச்சல் குளங்கள் என்றால், 30,000 முதல் 40,000 யூரோக்களும் ஆகிறதாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |