உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது சுவிட்சர்லாந்து
அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தரவரிசைப்பட்டியலில், சுவிட்சர்லாந்து உலகின் தலைசிறந்த நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு அடுத்தடுத்த இடங்களில் ஜேர்மனி, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
US News & World Report என்னும் நிறுவனம், 85 நாடுகளை 73 காரணிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், சுவிட்சர்லாந்து உலகின் தலைசிறந்த நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
73 காரணிகளில் அனைத்திலும் சுவிட்சர்லாந்து அதிக புள்ளிகளைப் பெறவில்லையானாலும், கீழ்க்கண்ட விடயங்களில் அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது.
வர்த்தக நிறுவனங்கள் நீண்ட நேரத்துக்கு செயல்படுதல் - 100/100 புள்ளிகள்.
வாழ்க்கைத்தரம் - 96.7/100 புள்ளிகள்.
மனித மற்றும் விலங்குகள் நலனில் அக்கறை - 86.6/100 புள்ளிகள்.
இதுபோக, மற்ற நாடுகளைவிட சுவிட்சர்லாந்து சிறந்து விளங்கும் ஒரு விடயம், அரசியல் அதிகாரப்பகிர்வு.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, அரசியல்வாதிகளிடம் அல்ல, நேரடியாக மக்களிடம்தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளன, அவர்கள்தான் அவற்றை செயல்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டியலில் இரண்டாவது இடத்தை ஜேர்மனியும், மூன்றாவது இடத்தை கனடாவும் பெற்றுள்ளன.