சுவிட்சர்லாந்தில் கொள்ளைச் சம்பவங்கள்: பக்கத்து நாட்டின்மீது குற்றச்சாட்டு
சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் நிகழ்ந்த சில கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில், பக்கத்து நாட்டின்மீது வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளது சுவிட்சர்லாந்து.
சுவிட்சர்லாந்தில் கொள்ளைச் சம்பவங்கள்
சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில், ஒரே வாரத்தில் இரண்டு துப்பாக்கிக் கடைகளில் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், அந்த கொள்ளைச் சம்பவங்களுக்கு பக்கத்து நாடான பிரான்ஸ்தான் காரணம் என வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளது சுவிட்சர்லாந்து.

ஊடகவியலாளர்களுக்கு பேட்டி அளித்த ஃபெடரல் பொலிசார், சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகள், எல்லைக்கு அப்பாலிருந்து வரும் கொள்ளையர்களால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
குறிப்பாக, Annemasse, Lyon, Grenoble மற்றும் Saint-Étienne ஆகிய பிரெஞ்சு நகரங்களிலிருந்து கொள்ளையர்கள் சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விடயம் என்னவென்றால், பொதுவாக இப்படி குற்றவாளிகளின் நாடு குறித்து சுவிஸ் பொலிசார் வெளிப்படையாக கருத்துக் கூறுவதில்லை.
இதற்கிடையில், எல்லைக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கவேண்டும் என சுவிஸ் மக்கள் கட்சி கூற, எல்லையில் பாதுகாப்புக்காக பணம் செலவிடுவதைவிட, உள்ளூர் பாதுகாப்பை வலுப்படுத்துவதே நல்லது என்கிறார்கள் மற்ற கட்சியினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |