சுவிட்சர்லாந்தை உலுக்கிய சம்பவம்... இத்தாலியர்களுக்கான மருத்துவச் செலவை ஏற்க ஒப்புதல்
Switzerland agrees to pay medical bills for Italian: இத்தாலியர்களுக்கான மருத்துவச் செலவுகளை ஏற்க சுவிட்சர்லாந்து ஒப்புக்கொண்டுள்ளது.
Crans-Montana தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இத்தாலியர்களின் மருத்துவச் செலவுகளைத் தாங்கள் ஏற்பதாக சுவிட்சர்லாந்து அரசு புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் சிகிச்சை
இத்தாலியர்களின் மருத்துவச் செலவை அந்த நாட்டிடம் இருந்து வசூலிக்க இருப்பதாக வெளியானத் தகவலை அடுத்து, இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அந்த முடிவை அவமானம் என்று குறிப்பிட்டிருந்ததை அடுத்தே, சுவிட்சர்லாந்தின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Crans-Montana பனிச்சறுக்கு மையத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, கூட்டம் நிறைந்த மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நாற்பத்தொரு பேர் மரணமடைந்தனர் மற்றும் 115 பேர் காயங்களுடன் தப்பியிருந்தனர்.
இச்சம்பவத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட பன்னிரண்டு இத்தாலியர்களுக்கு சுவிட்சர்லாந்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் இத்தாலியில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது 1.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் மதிப்பிலான மருத்துவச் செலவுகளை ஏற்கும் சுவிட்சர்லாந்தின் முடிவை பிர்கமர் மெலோனி வரவேற்றுள்ளார்.
மேலும், இந்தத் தீர்வினால் மகிழ்ச்சியடைவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கோ அல்லது இத்தாலிக்கோ எந்தச் சுமையும் ஏற்படாது என்பது இதனால் உறுதியாகியுள்ளது என்று மெலோனி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, அளவற்ற வலியை அபாரமான கண்ணியத்துடனும் வலிமையுடனும் எதிர்கொண்டு வரும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் காயமடைந்த இளம் வயதினரையும் மீண்டும் ஒருமுறை நினைவில்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் உணர்ந்துள்ளது
சுவிட்சர்லாந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான ஓர் ஒப்பந்தத்தின்படி, ஒரு நாட்டின் குடிமக்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெறும்போது, அவர்களுக்கான செலவை அந்தந்த நாடுகளே ஏற்றுக்கொள்கின்றன.

சுவிஸ் காப்பீடு கொண்ட நோயாளி ஒருவர் இத்தாலியில் சிகிச்சை பெற்றார். வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவர் மீதும் சுமத்தப்படும் அளவிட முடியாத துயரத்தை சுவிஸ் அரசாங்கம் உணர்ந்துள்ளது.
மேலும், சிகிச்சைச் செலவுகளைத் தாமே ஏற்றுக்கொள்ளும் முடிவு, பரஸ்பரப் பரிமாற்றக் கொள்கைக்கு இணங்க இருப்பதுடன், தங்களுக்குக் காட்டப்பட்ட ஆதரவை சுவிட்சர்லாந்து அங்கீகரிப்பதற்கான ஒரு அறிகுறியாகவும் குறிப்பிட்டுள்ளது.