சுவிஸ் விமானப்படை புதுப்பிக்க திட்டம்: 36 அதிநவீன போர் விமானங்களை வாங்க ஒப்புதல்!
சுவிட்சர்லாந்து அரசு அமெரிக்காவிடமிருந்து F-35 ரக போர் விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து இராணுவம் அதன் அடுத்த தலைமுறை போர் விமானமாக F-35 Lightning II-ஐ தேர்வு செய்துள்ளது என்று அரசாங்கம் புதன்கிழமையன்று தெரிவித்தது.
அமெரிக்காவின் விண்வெளி தொழுல்நுட்ப நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) இந்த F-35 Lightning II எனும் அதி நவீன பைட்டர் ஜெட்களை தயாரிக்கின்றன.
சுமார் 5 பில்லியன் சுவிஸ் பிரான்க்ஸ் (5.5 பில்லியன் டொலர்) செலவில் 36 எண்ணிக்கையிலான F-35A ரக போர் விமானங்களை வாங்க சுவிட்சர்லாந்தின் பெடரேல் கவுன்சில் தீர்மானித்துள்ளது.
தற்போது உள்ள போர் போர் விமானங்கள், குறிப்பாக McDonnell Douglas F/A-18 ரக விமானங்களின் சேவை 2030-ஆம் ஆண்டிற்கு முடிவடையவுள்ளதால், “Air 2030” என்று அழைக்கப்படும் புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் இந்த புதிய விமானங்கள் வாங்கப்படுகின்றன.
இது குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் மூன்று தசாப்த காலப்பகுதியில், கொள்முதல் மற்றும் இயக்க செலவுகள் உட்பட, F-35A க்கு 15.5 பில்லியன் சுவிஸ் பிராங்க் (16.75 பில்லியன் டொலர்) செலவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், Raytheon நிறுவனத்தினமிருந்து 2 முதல் 3.6 பில்லியன் சுவிஸ் பிரான்க் மதிப்பில் ஐந்து Patriot ஏவுகணைகள் (ground-based air-defense system units) வாங்க பெடரேல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.