ஜனவரி முதல் இந்த நாட்டிற்கு நேரடி விமான சேவை! SWISS ஏர்லைன்ஸ் அறிவிப்பு
சூரிச் மற்றும் மும்பை இடையே வாரத்திற்கு இரண்டு நேரடி விமானங்களை ஜனவரி 10 முதல் SWISS ஏர்லைன் இயக்கத் தொடங்கும் என்று Lufthansa குழுமம் தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவும் சுவிட்சர்லாந்தும் காற்று குமிழி ஒப்பந்தத்தில் (air bubble pact) கையெழுத்திட்ட பிறகு இந்த அறிவிப்பு வந்தது.
Omicron காரணமாக உலகம் முழுவதும் கோவிட்-19 கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டுவரும் நிலையில், இரு நாடுகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்களை இயக்க இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது.
கடந்த 2020 மார்ச் மாதத்திலிருந்து, முதல் முறையாக அடுத்த மாதத்திலிருந்து சுவிஸ் இந்தியா இடைய நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது.
ஜனவரி 10-ஆம் திகதி முதல் சூரிச்-மும்பை இடையே நேரடி விமான சேவைகள் தொடங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் முதல் சூரிச்-டெல்லி இடையேயான நேரடி விமான சேவை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியை தளமாகக் கொண்ட Lufthansa குழுமம் நெட்வொர்க் ஏர்லைன்ஸ், யூரோவிங்ஸ் மற்றும் ஏவியேஷன் சர்வீசஸ் போன்ற பிரிவுகளில் ஆர்வமாக உள்ளது. இது Lufthansa, SWISS, Austrian Airlines மற்றும் Brussels Airlines போன்ற பிராண்டுகளை கொண்டுள்ளது.
குழுவின் வருவாய் 2020-ல் 13.6 பில்லியன் யூரோக்களாகக் குறைந்துள்ளது. 2019-ல் Lufthansa-குழுமத்தின் வருவாய் 36.4 பில்லியன் யூரோக்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.