கோவிட் காலகட்டத்தின்போது பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய சுவிஸ் விமான நிறுவனம்: இப்போது மக்கள் படும் அவஸ்தை
சுவிஸ் விமான நிறுவனம் ஒன்று, சுமார் 100 விமானங்களை ரத்து செய்துள்ளதால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளார்கள்.
SWISS International Airlines என்னும் சுவிஸ் விமான நிறுவனம், கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டத்தின்போது நூற்றுக்கணக்கான பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது.
இப்போது, போதுமான பணியாளர்கள் இல்லாததால், நூற்றுக்கணக்கான விமானங்களை இயக்க முடியாமல் தானும் தவிப்பதோடு, மக்களையும் கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளது அந்நிறுவனம்.
பயணம் புறப்படலாம் என்ற திட்டத்திலிருந்த மக்களுக்கு, திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள தகவலை நேற்று மதியம்தான் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திடீர் அறிவிப்பால், சுமார் 30,000 பயணிகள் பாதிக்கப்பட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.