வெளிநாட்டவர்களுக்கு சுவிஸ் விமான நிலையங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தி
சுவிட்சர்லாந்துக்கு வரும் வெளிநாட்டவர்கள், குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத பயணிகள், விமான நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.
சுவிஸ் விமான நிலையங்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES திட்டம்) அமுலுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் குறுகிய கால பயணத்துக்காக பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், எல்லைகளில் தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.

ஆக, சுவிட்சர்லாந்துக்கு வரும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், தங்கள் கைரேகை, புகைப்படம் போன்றவற்றை பதிவு செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடலாம் என சுவிஸ் விமான நிலையங்கள் தெரிவித்துள்ளன.
சூரிக் விமான நிலையத்தைப் பொருத்தவரை, பிஸியான நேரங்களில் பயணிகள் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க நேரிடலாம் என்றும், ஜெனீவா விமான நிலையத்திலும் தாமதங்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துவும், கோடை விடுமுறை வேறு நெருங்குவதால், நிலைமை மேலும் மோசமாகலாம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |