சுவிஸில் அமுலுக்கு வரும் புதிய விதிகள்! வெளியான முக்கிய அறிவிப்பு
சுவிஸில் மக்கள் எளிதில் பாலினத்தை சட்டப்பூர்வமாக மாற்ற அனுமதிக்கும் வகையில் புதிய விதி அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஜனவரி 1ம் திகதி முதல் புதிய விதி நாட்டில் அமுல்படுத்தப்படும் என சுவிஸ் அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் உள்ள மக்கள் ஜனவரி 1 முதல் உள்ளூர் பதிவு அலுவலகத்திலே பாலினத்தை சட்டப்பூர்வமாக மாற்ற முடியும்.
புதிய விதிகளின் படி, சட்டப்பூர்வ பாதுகாவலர் பாதுகாப்பில் இல்லாத 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் உள்ளூர் பதிவு அலுவலகத்தில் சுயமாக தங்கள் பாலினம் மற்றும் சட்டப்பூர்வ பெயரை மாற்ற முடியும்.
இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் பாதுகாப்பில் உள்ளவர்களுக்கு, பாதுகாவலரின் ஒப்புதல் தேவை.
புதிய விதிகளின் மூலம் ஹார்மோன் சிகிச்சை, மருத்துவக் ஆய்வு அல்லது மேலதிக மதிப்பாய்வு அல்லது அதிகாரத்துவ நடவடிக்கைகள் இல்லாமல் ஒரு நபர் தனது பாலினத்தை சட்டப்பூர்வமாக மாற்றலாம்.
இதன் மூலம் மருத்துவ நடைமுறைகளிலிருந்து பாலினத் தேர்வைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட 24 உலக நாடுகள் அடங்கிய பட்டியிலில் சுவிட்சர்லாந்தும் இணைந்துள்ளது.