ரஷ்யா மீது கை வைத்தால் பின் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சுவிஸ் தூதர்
ரஷ்யா மீது கைவைத்தால், பின் விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ரஷ்யாவுக்கான முன்னாள் சுவிஸ் தூதர்.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதை பாரபட்சமில்லாமல் விமர்சிக்கும் சுவிஸ் தூதரான Yves Rossier, அதே நேரத்தில், உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் மீதும் தவறு இருக்கிறது என்கிறார். ரஷ்யாவை காயப்படுத்த விரும்பினால், நீங்கள் அதற்கான பின்விளைவுகளை சந்திக்கவும் தயாராக இருக்கவேண்டும் என்கிறார் Rossier.
புடினுக்குப் போகும் பணத்தை நீங்கள் தடுத்து நிறுத்த விரும்பினால், உங்களுக்கு முழுமையாக எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கல் நிறுத்தப்படும். தடைகள் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளை மாற்றியதாக சரித்திரமே கிடையாது என்கிறார் அவர்.
உக்ரைனில் 2014இல் நடைபெற்ற Maidan protests என்னும் மக்கள் போராட்டத்தின் போது உக்ரைன் எடுத்த முடிவு, Minsk ஒப்பந்தத்தை மீறியது என உக்ரைன் தரப்பிலும் தவறுகள் உள்ளன என்று கூறும் Rossier, ஆனாலும், ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதை இவற்றைக்கொண்டெல்லாம் நியாயப்படுத்தமுடியாது என்கிறார்.
PC: Keystone / Anatoly Maltsev