ஐரோப்பாவிலேயே அதிக அளவில் ரயிலில் பயணிப்பது இந்த நாட்டவர்கள்தான்
ஐரோப்பாவிலேயே, சுவிஸ் நாட்டவர்கள்தான் அதிக அளவில் ரயிலில் பயணிக்கிறார்களாம்.
அதிக அளவில் ரயிலில் பயணிப்பது இந்த நாட்டவர்கள்தான்
அது நீண்ட நேரமானாலும் சரி, நீண்ட தூரமானாலும் சரி, ஐரோப்பாவிலேயே, அதிக அளவில் ரயிலை பயன்படுத்துவது சுவிஸ் நாட்டவர்கள்தான்.
2023ஆம் ஆண்டில், சுவிஸ் நாட்டவர் ஒருவர். சராசரியாக 2,466 கிலோமீற்றர் தூரம் ரயிலில் பயணித்துள்ளார்.
ஒரு ஆண்டில் பயணித்த தூரம் 13.2 சதவிகிதமும், பயணங்களின் எண்ணிக்கை 11.5 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக பொதுப் போக்குவரத்து சேவை தகவல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன் பொருள் என்னவென்றால், ஆஸ்திரியா நாட்டவர்களைவிட 50 சதவிகிதம் அளவுக்கு, கூடுதலாக சுவிஸ் நாட்டவர்கள் ரயிலை பயன்படுத்தியுள்ளார்கள்.
இங்கு எதற்காக ஆஸ்திரியாவின் பெய வருகிறது என்றால், ஐரோப்பாவிலேயே அதிக அளவில் ரயிலில் பயணிக்கும் மக்களைக் கொண்ட இரண்டாவது நாடு ஆஸ்திரியாதான்.
உலக அளவில் பார்த்தால், ரயில் பயணங்களில் சுவிஸ் மக்களோடு போட்டிபோடும் நாடு, ஜப்பான் மட்டுமே என்கிறது மற்றொரு ஆய்வு.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |