போர் தொடர்பில் சுவிட்சர்லாந்தின் ராணுவ தளபதி எச்சரிக்கை
உலகில் நிலவும் போர்ச்சூழலுக்கிடையில், சுவிட்சர்லாந்து தன்னைக் காத்துக்கொள்ள தயாராக இல்லை என சுவிட்சர்லாந்தின் ராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.
சுவிஸ் ராணுவ தளபதி எச்சரிக்கை
உலகில் நிலவும் நிலையற்ற சூழலில், சுவிட்சர்லாந்து தன் பாதுகாப்பை வலுப்படுத்திக்கொள்ளவேண்டும் என சுவிட்சர்லாந்தின் ராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய சுவிட்சர்லாந்தின் ராணுவ தளபதியான பெனடிக்ட் ரூஸ் (Benedikt Roos), உக்ரைன் போர், ஈரான் போர் உட்பட உலகில் போர்ச்சூழல் அதிகரித்து வருவதை பார்க்கும்போது, சுவிட்சர்லாந்து தன் பாதுகாப்பை வலுப்படுத்திக்கொள்ளவேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்.
குறிப்பாக, தன் முக்கிய உள்கட்டமைப்புகளை காத்துக்கொள்ள சுவிட்சர்லாந்துக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை என்று கூறியுள்ளார் அவர்.
நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துதல், மற்றும் சைபர் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பை அதிகரித்தல் ஆகிய இரண்டு முக்கிய பிரச்சினைகள் சுவிட்சர்லாந்துக்கு உள்ளதாக தெரிவித்தார் அவர்.
ராணுவத்திற்கான உபகரணங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களுக்கான அதிகரித்து வரும் செலவுகளைச் சுட்டிக்காட்டிய அவர், வான் பாதுகாப்புத் திறனில் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் இருப்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |