சுவிஸ் சூக் அருள்மிகு ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய பொதுக்கூட்டம்
சுவிஸ் - சூக் கூனன் பேர்க் ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் 2021 ம் ஆண்டுக்கானபொதுச்சபைக் கூட்டமும் , நிர்வாகசபைத் தெரிவும் தலைவர் சுதாகர் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஆலய குரு பாஸ்கரன் ஐயா அவர்களால் விநாயகர் பூசையும், ஆசியுரையும் நிகழ்த்தப்பட்டுள்ளதுடன்,அதனைத் தொடர்ந்து தலைவர் தர்மராஜா சுதாகரால் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செயலாளர் அறிக்கை , பொருளாளர் அறிக்கை என்பனவும் வாசிக்கப்பட்டது . ஆலயத்தின் அமைப்பு நிகழ்வுகளுக்கு நீண்ட காலமாக பங்காற்றிய முன்னைநாள் தலைவர் ஆறுமுகம் பாலசிங்கம் கடந்த நிர்வாக சபையின் வினைத்திறனைப் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட பொதுச்சபை உறுப்பினர்களும் கடந்த நிர்வாக சபையின் தலைவர் சுதாகர் , பொருளாளர் ரஞ்சன் ஆகியோரின் பணிகளை பாராட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து பொதுச்சபை உறுப்பினர்கள் , தமது கருத்துக்களை முன்வைத்த பின்னர் பழைய நிர்வாக சபை கலைக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து பொதுச்சபை உறுப்பினர் ஒருவர் யாப்புக்கான வரைபு ஒன்றை முன்வைத்தார்.
அதனை நிர்வாக சபையினால் பரிசீலனைக்கு உட்படுத்துவதாக அறிவிக்கப்பட்டதுடன்,2021 ம் ஆண்டுக்கான நிர்வாக சபைத்தெரிவு இடம்பெற்றது.
தலைவராக மீண்டும் தர்மராஜா சுதாகரும் , செயலாளராக சாந்தரூபன் கரனும் , பொருளாளராக ஆறுமுகம் பாலசிங்கம் அவர்களும் உபதலைவராக காண்டீபன் அமிர்தலிங்கமும் , உப செயலாளராக லஸ்சன் சாந்த குமாரும் , நிர்வாக சபை உறுப்பினர்களாக சியாமளா - பரமேஸ்வரனும் , கௌரி தவராசாவும் இளங்கோ - சிவநேசனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஈழத்தில் உள்ள ஏழை மக்களுக்கு உதவும் விதமாக ஆலய நிதியில், குறிப்பிட்ட ஒரு தொகையை வருடாந்தம் ஒதுக்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
அத்தோடு நிர்வாகத்தில் இளையோர்கள் , பெண்கள் என பலதரப்பட்டவர்களையும் உள்ளீர்த்து , நிர்வாகம் அமைத்துள்ளமை சிறப்பம் என மக்கள் கூறுகின்றனர்.