விருது வாங்கிய மேடையில் மொட்டை அடித்துக்கொண்ட சுவிஸ் எழுத்தாளர்! சொன்ன காரணம்
சுவிஸ் எழுத்தாளர் கிம் டி எல் ஹொரைசன் German Book விருதை வென்றார்.
ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மேடையில் மொட்டையடித்துக்கொண்டார்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் கிம் டி எல் ஹொரைசன் (Kim de l'Horizon) மதிப்புமிக்க German Book விருதைப் பெற்ற பிறகு மேடையில் மொட்டையடித்துக்கொண்டார்.
ஈரானில் போராட்டம் நடத்தும் பெண்களுக்கு ஒற்றுமையைக் காட்டும் வகையில் ஹொரைசன் மேடையில் மொட்டையடித்தார்.
இந்த விருது தனக்கானது மட்டுமல்ல, அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவோரின் போராட்டத்திற்கானது என்று, திங்களன்று பிராங்பேர்ட்டில் நடந்த விருது வழங்கும் விழாவில் பார்வையாளர்களிடம் கூறினார்.
dpa/AFP
அவர் எழுதிய முதல் நாவலான Blutbuch-க்கு (இரத்த புத்தகம்) இந்த விருது வழங்கப்பட்டது. வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, மீசையுடைய மேடையில் ஏறி அவர் ஒரு பாடலையம் பாடினார்.
பின்னர் மேடையிலேயே மின்சார ரேசரைப் பயன்படுத்தி தனது தலைமுடியை மொட்டையடித்தார்.
German Book விருது ஆண்டின் சிறந்த ஜேர்மன் மொழிப் புத்தகத்திற்கு வழங்கப்படுகிறது. வெற்றியாளருக்கு 25,000 யூரோ பரிசுத்தொகை அளிக்கப்படும்.
புதன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் உலகின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சியான பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியின் தொடக்கத்திற்கு முன்னதாகவே இந்த விருது விழா பாரம்பரியமாக நடைபெறுகிறது.
கடந்த மாதம் ஈரானின் கடுமையான ஆடைக் குறியீட்டை மீறியதாகக் கூறி தெஹ்ரானில் அறநெறிப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட 22 வயது மஹ்ஸா அமினி தடுப்புக்காவலில் இருந்தபோது உயிரிழந்ததை அடுத்து, அங்கு சுமார் ஒரு மாதமாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.