சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவில் சிக்கிய நால்வர்., ஒருவர் உயிரிழப்பு
சுவிட்சர்லாந்தில் நான்கு நபர் பனிச்சரிவில் சிக்கியதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சுவிட்சர்லாந்தின் தென்கிழக்கு வாலிஸ் பகுதியில் உள்ள ரெக்கிங்கனில் சனிக்கிழமையன்று பனிச்சரிவு ஒன்று ஏற்பட்டது.
இந்த பனிச்சரிவில் இத்தாலியைச் சேர்த்த நான்கு பேர் கொண்ட மலையேறுபவர்களின் குழு ஒன்று சிக்கி புதைந்தது. அதில் இரண்டு பேர் எப்படியோ தப்பித்து மேலே வந்து, மற்ற இருவரையும் தேடி வெளியே எடுத்டுள்ளனர்.
ஆனால், அந்த இருவரில் 68 வயதான ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றோரு நபர் காயமடைந்தார். அவர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வெள்ளிக்கிழமை MeteoSwiss வானிலை சேவையின் தற்காலிக அறிக்கையின்படி, இந்த குளிர்காலத்தில் இதுவரை 45 பனிச்சரிவுகளில் மக்கள் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் "கவனமாக, கவனமாக, கவனமாக" இருக்கும்படி MeteoSwiss வலியுறுத்தியது.
இதேபோல், ஆஸ்திரியாவின் டைரோலின் எல்லையை ஒட்டிய சுவிட்சர்லாந்தின் கிராபுண்டன் பகுதியில் பனிச்சரிவுகளில் ஒருவர் இறந்தார் மற்றும் பலர் காயமடைந்தனர், அங்கு கடந்த மூன்று நாட்களில் பனிச்சரிவுககளில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆஸ்திரியா-சுவிட்சர்லாந்து எல்லையில் இதுவரை 100-க்கும் மேலான பனிச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.