கருப்புப் பணத்தின் சொர்கமான சுவிஸ் வங்கி: வெளிவந்த ரகசியம்!
உலகத்தில் இருக்கும் கருப்புப் பணங்களின் சொர்கமாக இருப்பது சுவிஸ் வங்கி என்று சொன்னால் நம்பமுடியுமா? ஆம் உலகத்தில் இருக்கும் பணக்காரர்கள் அனைவரும் தங்களது கருப்பு பணத்தை பதுக்கி வைத்துக்கொள்வது இந்த வங்கியில் தான்.
ஆகவே இந்த சுவிஸ் வங்கியில் அப்படி என்ன இருக்கு என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
கருப்பு பணம்
அரசாங்கத்திடம் இருந்து மறைத்து வைக்கப்படும் எந்த பணமும் கருப்பு பணமாக தான் கூறப்படும். இந்த பணத்தை பந்தயம், லஞ்சம், கடத்தல் போன்ற சட்டவிரோதமான செயல்கள் மூலம் ஒருவர் சம்பாரிப்பது கருப்புப் பணமாகும்.
சுவிஸ் வங்கி
சுவிஸ் வங்கி என்பது ஒரே ஒரு வங்கி என்றும் அதற்கு பெயர் சுவிஸ் வங்கி என்றும் நினைக்காதீர்கள். சுவிஸ் நாட்டில் இருக்கும் அனைத்து வங்கிகளும் சுவிஸ் வங்கி என்று தான் அழைப்பார்கள்.
இந்த சுவிஸ் வங்கியின் கடுமையான சட்டத்தின் காரணமாக தான் இந்த வங்கி உலகிலேயே மிகவும் பிரபல்யமானதாக இருகின்றது.
சுவிஸ்லாந்து அரசாங்கமானது 1730 ஆம் ஆண்டு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதாவது எந்த வங்கியும் அவர்களுடைய வாடிக்கையாளர்களை பற்றி வெளியில் சொல்லக்கூடாது என்று.
இந்த சட்டமானது நடைமுறைக்கு வந்தவுடன் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பணக்காரர்கள் அனைவரும் சுவிஸ் வங்கியில் செல்வங்களை வைப்பிலிட செய்தார்கள்.
இதன் காரணமாக அங்கு பணிப்புரிபவர்கள் வாடிக்கையாளர்களை இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தார்கள்.
இதன் காரணமாக சுவிஸ் வங்கிக்கு பல பணங்கள் வந்தது. இது சுவிஸ் அரசாங்கத்திற்கும் ஒரு பயனாக இருந்தது.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில், சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றவர்களின் டெபாசிட் மற்றும் சுவிட்சர்லாந்தில் சம்பாதித்த பணத்தை டெபாசிட் செய்வதற்கு மட்டுமே அந்நாட்டில் வரி செலுத்த வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை. இதன்காரணமாகவும் வெளிநாட்டினர் இங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்ய விரும்பினார்கள்.
மேலும் இதில் பணம் வைத்திருப்பவர்கள் சுவிஸ் அரசாங்கத்திற்கு காரணம் தெரிவிக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |